November 30, 2020

’மாஸ்டர்’ இயக்குநர் வெளியிட்ட டிரெய்லர்!!!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘டேனி’. பி.ஜி.முத்தையா தயாரிப்பில், சந்தோஷ் தயாநிதி இசையில், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி எழுதி இயக்கிய திரைப்படம் ‘டேனி’. அதிரடி திரைப்படமான டேனி திரைப்படத்தில் வரலக்ஷ்மி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி 5 மார்ச் 2019 அன்று வரலக்ஷ்மியின் 34வது பிறந்தநாளில் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து நேற்று டேனி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களால் வெளியிடப்படும் என்று நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தன் டிவிட்டர் பக்கத்தில்  தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் டிவிட்டர் பக்கத்தில் ’டேனி’ திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டு ‘ஒரு திரில்லர் கொலை மர்மத்தின் சுவாரஸ்யமான டிரெய்லரை உங்களுக்கு வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி, வரலக்ஷ்மியின் டேனி வருகின்றது. ஆகஸ்ட் 1 அன்று ஜீ5 தமிழ் தளத்தில் பிரீமியராக உள்ளது’ என்று தெரிவித்துப் படக்குழுவினரை டேக் செய்துள்ளார். இதனைப் படக்குழுவினர் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

%d bloggers like this: