December 3, 2020

புது வெப்சைட்டை தொடங்கியது நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்!!!

தமிழ் திரைப்பட பெயர்களை பதிவு செய்ய புது இணையதளத்தை உருவாக்கியுள்ளனர் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தினர்.

தமிழ் சினிமா துறையில் தற்போது திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்” என்ற சங்கத்தை நிறுவியுள்ளனர். இதற்கு இயக்குநர் பாரதிராஜா அவர்கள் தலைமை வகிக்கிறார்.

நீண்ட காலமாக தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தீர்மானித்து புதிய இணையதளத்தை உருவாக்க முடிவுசெய்தனர். இதில் திரைப்படங்களின் பெயர்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் திரைப்பட வெளியீட்டின் போது ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். மேலும் திரைத்துறையில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் நோக்கத்துடன் உருவாக்கியுள்ளனர்.

இதன் அதிகாரப்பூர்வ செயல்பாடு வெள்ளிக்கிழமை அன்று தொடங்கும் என்று கூறியிருந்த நிலையில் www.tfapa.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை வெளியிட்டுள்ளது ‘தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்”.

இந்த அறிவிப்பினை ரமேஷ் பாலா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அனைவருக்கும் ஒரு விரிவான மற்றும் நன்கு அட்டவணைப்படுத்தப்பட்டத் தகவல். சென்று சரிபார்க்கவும்” என்று கூறிப் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் திரைத்துறைச் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அனைவரும் இதனை வரவேற்றுள்ளனர்.

%d bloggers like this: