October 29, 2020

வரும் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுகிறதா???

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்திய அரசு மார்ச் 26ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பிறப்பித்திருந்தது. இது பல கட்டங்களாக பிறப்பித்து வந்தது. தற்போது ஒன்பதாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 31ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடு நீடிக்கப்படும்.

கட்டுப்பாடுகளை அறிவிக்கும் அதே நேரத்தில் சில தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. அதில் முக்கியமாக தற்போது திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை வரும் அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் திறப்பதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது. அதுபோல கல்வி நிலையங்களுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் விதிமுறைகளை அந்தந்த மாநில அரசும் யூனியன் பிரதேசங்களும் மேற்கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திரையரங்குகளின் கட்டுப்பாடுகளை தளர்வு செய்யப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் திரைப்படங்களின் ஓ.டி.டி தளத்தின் வெளியீட்டில் மாற்றம் இருக்குமா என்பது தெரியவில்லை.

%d bloggers like this: