November 25, 2020

தெறிப் படத்தின் நான்காம் ஆண்டில் நன்றி தெரிவித்த அட்லி!

தெறி படம் வெளியாகி இன்றோடு நான்கு ஆண்டுகளாகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பார். இந்தப் படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, மெர்சல், பிகில் எனத் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்ததன் மூலம் இவர்கள் தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியாக மாறிப்போயிருக்கிறார்கள். தெறி படத்தின் நான்காம் ஆண்டை கொண்டாடும் விதமாக அட்லி தனது டிவிட்டர் பக்கத்தில், ”தெறி எனக்கு மிகவு பிடித்த, என் மனதிற்கு நெருக்கமான படமும் கூட., மேலும் இந்தப் படத்தின் வெற்றி விஜய் அண்ணாவையே சேரும், நீங்கள் இல்லை என்றால் இதில் எதுவுமே சாத்தியமில்லை, பேரன்புகள் அண்ணா” என்றும் கூறியுள்ளார்.” தனக்கும், தன்னுடைய தெறி படக் குழுவினருக்கும் வாய்ப்பளித்த ’தி வி கிரியேஷண்ஷ்’கலைப்புலி எஸ் தாணுவிற்கும் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜேக்‌ஷன், ராதிகா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையில் படத்தின் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

%d bloggers like this: