October 31, 2020

விஜய் சேதுபதியால் பிரபல ஹீரோ மீண்டும் இயக்குநர் ஆகிறார்!!

தமிழ் திரைத்துறையில் 80 மற்றும் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். அவர் நடித்த கரகாட்டக்காரன் மற்றும் பல படங்கள் சூப்பர் ஹிட்டானது. அந்த காலகட்டங்களில் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. இவருடைய தேதிக்காகப் பல தயாரிப்பாளர்கள் வீட்டு வாசலில் காத்திருந்த காலங்கள் எல்லாம் இருந்தது.இவர் அரசியலிலும் தீவிரமாகச் செயல்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

நீண்ட காலமாக நடிக்காமலிருந்த ராமராஜன், கடைசியாக மேதை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில், கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தைப் படமாக்கப்போவதாகச் செய்திகள் வந்தன. ஆனால், அது நிறைவேறவில்லை. இப்போது ராமராஜன் மீண்டும் படம் இயக்கப் போவதாகவும் அதில் விஜய்சேதிபதி நடிக்கப் போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளன.

முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியிடம், இவர்  கதை சொல்லி இருப்பதாகவும் அதில் நடிக்க விஜய் சேதுபதி சரி சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ராமராஜன் நடிக்கவில்லை என்றும் இயக்கம் மட்டுமே செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

1 thought on “விஜய் சேதுபதியால் பிரபல ஹீரோ மீண்டும் இயக்குநர் ஆகிறார்!!

Comments are closed.

%d bloggers like this: