November 25, 2020

அட்லி தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்…

நேற்று அட்லீ தனது டிவிட்டர் பக்கத்தில் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் நல்ல வசூலை ஈட்டித்தந்தது. ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், இயக்குநர்கள் தங்கள் வீட்டிலிருந்தே அடுத்த படத்திற்கான கதையை உருவாக்கி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அட்லீ தனது அடுத்த படத்தின் தலைப்பு வெளியீடு டீசரை வெளியிட்டுள்ளார். படத்திற்கு அந்தகாரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,

அந்தகாரம் படத்தைத் தயாரிப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்தப் படத்தின் முன்னோட்டம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். இயக்குநர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ பாஃர் ஆப்பிள் மற்றும் ஃபேஷன் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் எதையும் அட்லீ வெளியிடவில்லை. இதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: