November 25, 2020

அட்லீயின் அடுத்தப் படம் பற்றி நாளை அறிவிக்கிறார்!

முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அட்லீ தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். இவர் பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். அட்லீ ஆர்யா, நயன்தாராவின் நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானார். சமீபத்தில் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படம் நல்ல வசூல் சாதனையைப் படைத்தது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்த இந்தப் படம் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்டிருந்தது.

விஷ்ணு விஷாலின் அடுத்தப் படமான மோகன்தாஸ் படத்தின் டைட்டில் டீசர் வெளியானதைத் தொடர்ந்து அட்லீ தனது டிவிட்டர் பக்கத்தில், ரசிக்கும்படியான ஒரு கதை உருவாகி வருவதாகப் பதிவொன்றைப் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அட்லீயின் தயாரிப்பு நிறுவனமாக ’எ பாஃர் ஆப்பிள்’ மற்றும் ’பேஷன் ஸ்டூடியோஸ்’ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் தகவல்கள் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். படப்பிடிப்புகள் எப்போது துவங்கும் என்று தெரியாத நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

%d bloggers like this: