November 25, 2020

`அந்தகாரம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

இயக்குனர்  அட்லி, `சங்கிலி புங்கிலி’  கதவ திற படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அட்லி, விஜய் கூட்டணியில் தெறி, மெர்சல், பிகில் என்ற மூன்று படங்களையும் வெற்றிப்படங்களாகத் தமிழ் ரசிகர்களுக்குக் கொடுத்தார் அட்லி. இதனைத் தொடர்ந்து அட்லியின் அடுத்த தயாரிப்பான அந்தகாரம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், ஊரடங்கு காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், திரையிடுவதற்கான பணிகளைத் தள்ளி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அட்லீ இன்று அந்தகாரம் படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிட்டுள்ளார். இவருடைய தயாரிப்பு நிறுவனமான ’ஏ பார் ஆப்பிள்’ சார்பாக ’அந்தகாரம்’ வெளிவரவிருக்கிறது. `அர்ஜுன் தாஸ்’ நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பூஜா ராமச்சந்திரன், மிஷா கொஷல், வினோத் கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விக்னராஜன் இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கைதி படத்தில் வில்லனாக நடித்தவர். இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பவர் பிரதீப் குமார். ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் இந்தப் படத்தினை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ”அந்தகாரம்” என்பதன் பொருள் அடர்ந்த இருள் என்பதாகும்.

%d bloggers like this: