November 25, 2020

இர்பான் பதான் பிறந்த நாளில் கோப்ரா படக்குழுவினர் வெளியிட்ட கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்!!!

நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமான ‘கோப்ரா’ இயற்கைக்கு அப்பாற்பட்ட திரில்லர் கதையைக் கொண்ட படமாகும்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் கீழ் எஸ்.எஸ். லலித் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் ஸ்ரீநிதி ஷெட்டி தமிழிலும், கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் திரைப்பட துறையிலும் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் இணைந்து மியா, கே.எஸ்.ரவிக்குமார், கனிகா, மிருணாளினி ரவி, ரோபோ சங்கர், பூவையார் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ஹரிஷ் கண்ணன் கையாண்டுள்ளார், புவன் சீனிவாசன் தொகுத்துள்ளார். விக்ரம் இந்தப் படத்தில் ஏழு வேடங்களில் நடித்துள்ளார். அரசியல்வாதி, பேராசிரியர், இயற்கைக் அப்பாற்பட்ட விஞ்ஞானி என வித்தியாசமான ஏழுக் கதாபாத்திரங்களில் விக்ரம் நடித்துள்ளார்.

கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் விஜய தசமியான நேற்று கோப்ரா திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வெற்றிகரமாக தொடங்கியது. படக்குழுவினர் பூஜையுடன் டப்பிங் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே இர்பான் பதான் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் இந்தப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாவதால் அவரின் பிறந்த நாளை சிறப்பிக்கு வகையில் கோப்ரா படக்குழுவினர் இர்பான் பதானின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ”அஸ்லான் இல்மாஸ்” என்ற பிரெஞ்சு காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இர்பான் பதானின் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

%d bloggers like this: