November 25, 2020

மிகப் பெரிய வெளியீட்டிற்குத் தயாராகும் விஷாலின் ”சக்ரா”!!! முழு வீச்சில் போஸ்ட் ப்ரொடெக்‌ஷன் பணிகள்!!!

விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் சக்ரா. சைபர் குற்றப் பின்னனியை மையமாக வைத்து வெளிவரவிருக்கும் இந்தப் படத்தில் விஷாலுடன் இணைந்து ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா, மூத்த நடிகை கே.ஆர்.விஜயா ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர்

விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியிருக்கிறார். இது இவருக்கு முதல் படமாகும். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பாதிப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு பணிகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் சக்ரா படக்குழுவினர் முழுவீச்சில் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர். மேலும் இதே போல இந்தப் படத்தின் போஸ்ட் ப்ரொடெக்‌ஷன் பணிகளும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சக்ரா திரைப்படம் மிகப்பெரிய வெளியீட்டிற்கு தயாராகி வருவதகாவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதன் படப்பிடிப்பு பணிகளும், போஸ்ட் ப்ரொடெக்‌ஷன் பணிகளும் முடிந்த கையோடு அடுத்ததாக துப்பறிவாளன்-2 படத்தின் படப்பிடிப்பை விஷால் தொடர இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் சக்ரா திரைப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: