October 21, 2020

முகேன் ராவ் நடிக்கும் முதல் படத்தின் அறிவிப்பு வெளியானது

ஆல்பம் பாடல்களின் மூலம் பிரபலமாகிப் பிறகு விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் பகுதி 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாகத் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைக் கூட்டியவர் முகேன் ராவ். மேலும் பிக்பாஸ் பகுதி 3இன் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறகு முகேன் திரைப்படங்களில் நடிப்பதாகச் செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது அந்தப் படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு வெற்றி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் முகேன் உடன் ஃபார்மர் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அணு கீர்த்திவாஸ் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தை வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார்; ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். இந்தப் படத்தை சிர்தி புரொடக்சன் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது.

இன்று இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி முகேன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: