October 29, 2020

ஆதித்யா வர்மா திரைப்படத்தின் பாலா வெர்ஷன் விரைவில் ஓ டி டி தளத்தில் வெளியாகிறது

2017ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். காதல் திரைப்பட வகையை சேர்ந்த அர்ஜுன் ரெட்டி பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை தொட்டது. 510 மில்லியன் வசூலை அள்ளிய இந்த திரைப்படத்தினை பிரணை ரெட்டி அவர்கள் பத்திரகாளி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். மேலும் சந்தீப் வங்கா அவர்கள் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்த திரைப்படத்தை தமிழில் பாலாவின் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டது. துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்திற்கு “வர்மா” என பெயரிடப்பட்டிருந்தது. பாலா இயக்கிய இந்த திரைப்படம் திருப்தி அளிக்காத நிலையில் முழுமையாக படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் கைவிடப்பட்டது. மீண்டும் இந்த திரைப்படத்தை வேறு புதுமுக இயக்குநரை கொண்டு இயக்க திட்டமிடப்பட்டு வெளியான திரைப்படம் தான் ஆதித்யா வர்மா.

2019ஆம் ஆண்டு வெளியான ஆதித்யா வர்மா திரைப்படத்தில் துருவ் விக்ரம், பனிதா சந்து, பிரியா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அறிமுக இயக்குநராகிய பரிசாய் அவர்கள் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். முகேஷ் மேத்தா அவர்கள் இ4 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். எதிர்பார்த்த அளவு வசூலை பெறாத நிலையில் தற்போது பாலா இயக்கிய வர்மா திரைப்படத்தை நாளை ஒடிடி தளத்தின் மூலம் வெளியிடப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

%d bloggers like this: