January 18, 2021

ஒருவாரத்திற்கும் மேலாக இடைவேளையின்றி நடக்கும் ஆதிக் மற்றும் பிரபுதேவா இணையும் படத்தின் “பகிரா” படபிடிப்பு!!!

த்ரிஷா இல்லனா நயன்தாரா படப் புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுதேவாவை வைத்து இயக்கும் திரைப்படம் பகிரா. கணேசன் சேகர் இசையில், ரூபன் எடிட்டிங்கில், அபிநந்தன் ராமனுஜம் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைப்பெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. பிரபுதேவாவுடன் இணைந்து ஆர்மியா டஸ்டர், சோனியா அகர்வால், காயத்ரி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் இளம் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இடைவேளையின்றி பகிரா படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருவதாகவும் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் உதவியாளர்களாகவும் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஒரு வாரமாக இதன் படப்பிடிப்பு இடைவேளையின்றி மிகவும் துரிதமாக நடைப்பெற்று வருவதால் விரைவில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: