October 26, 2020

ஜிவி பிரகாஷ் வெளியிட்ட சூரரைப் போற்று படத்தின் பின்னணி இசை

நடிகர் சூர்யா மற்றும் அபர்னா பாலமுரளி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சூரரைப் போற்று”. இப்படத்தை ‘துரோகம்’, ‘இறுதிச் சுற்று’ போன்ற திரைப்படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிக்யா நிறுவனத்துடன் சூர்யாவின் 2டி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது. படத்தின் பாடல்களும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

இம்மாத இறுதியில் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள படத்தினை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தின் முதல் ரீலின் பின்னணி இசையை உருவாக்கிக் கொண்டிருக்கும் பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் முதல் ரீலுக்கான பின்னணி இசையின் பார்வை என்று பகிர்ந்து உள்ளார். அதனை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, சக்தி வாய்ந்த பின்னணி இசை என்று தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் முழு பின்னணி இசையையும் திரையில் பார்க்கலாம்.

%d bloggers like this: