December 3, 2020

மெர்சல் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லி – எஸ்.ஜே.சூர்யா கூட்டணி

இயக்குநர் சங்கர் உடன் நண்பன், எந்திரன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் அட்லி. தற்போது ராஜா ராணி, தெறி, மெர்சல், “பிகில்” ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக உள்ளார்.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், எஸ்.ஜே சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துக் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மெர்சல். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா , டேனியல் என்ற மருத்துவர் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார்.

நேற்று எஸ். ஜே. சூர்யா தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பல பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இயக்குநர் அட்லி, மெர்சல் படப்பிடிப்பின் போது எஸ். ஜே. சூர்யாவுடன் எடுத்த புகைப்படத்தை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் அவருடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்தில் பணியாற்றக் காத்திருப்பதாக அட்லி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு எஸ்.ஜே சூர்யாவும் ‘ நானும் அதற்காகக் காத்திருக்கிறேன் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

%d bloggers like this: