October 31, 2020

அட்லியை க்ரைம் பார்ட்னர் என வர்ணித்த ப்ரியா…!!!

முன்னனி இளம் இயக்குநரான அட்லியின் மனைவி ப்ரியா அட்லி டிவிட்டரில் அழகிய புகைப்படம் ஒன்றை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அட்லி, இயக்குநர் சங்கரிடம் 2010ஆம் ஆண்டு வெளியான எந்திரன், 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் உள்ளிட்டப் படங்களில் உதவி இயக்கநராக பணியாற்றியுள்ளார். பின்னர் தன்னுடைய முதல் படத்திலேயே ஆர்யா, நயன்தாரா, ஜெய், சத்யராஜ், நஸ்ரியா என நட்சத்திர பட்டாளங்களை வைத்து தனது முதல் படமான ராஜா ராணி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தனது தனித்துவமான முதல் வெற்றியை நிலைநாட்டினார். பின்னர் தொடர்ந்து விஜய் படங்களை இயக்கி வரும் அட்லி விஜய்யின் செல்லத் தம்பி என்று சொல்லும் அளவுக்கு வெற்றிபப்படங்களை தொடர்ந்து விஜய்க்கு கொடுத்தும் வருகிறார்.

அட்லி கிருஷ்ண ப்ரியா என்பவரை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ப்ரியாவும் நடிப்பு, நடனம் என அனைத்திலும் திறமை வாய்ந்தவர். ப்ரியாவும் திரையில் அசத்துவார் என்று மேடை ஒன்றில் அட்லி தெரிவித்திருந்தார்.

அனைவரும் பொறாமைப்படும் ஜோடியாக வலம் வரும் ப்ரியா அட்லி ஜோடி அவ்வப்போது அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதே போல இன்றும் ப்ரியா அழகிய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து அட்லியை க்ரைம் பார்ட்னர் என்றும் வர்ணித்துள்ளார்.

%d bloggers like this: