November 30, 2020

அட்லியின் அந்தகாரம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது!!!

ஏ ஃபார் ஆப்பிள், பேஷன் ஸ்டூடியோஸ், ஓ2 பிக்சர்ஸின் இணைந்து தயாரிக்கும் படம் ”அந்தகாரம்”. வி,விக்னராஜன் இயக்கத்தில், ஏ.எம்.எட்வின் சாக்காய் ஒளிப்பதிவில், சத்யராஜ் நடராஜன் எடிட்டிங்கில், பிரதீப் குமார் இசையில் உருவான இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ளனர்.

முன்னணி இயக்குநரான அட்லி தயாரிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தகாரம் என்பதற்கு ”பிசாசின் ஆதிக்கம் நிறைந்த இடம்” அல்லது பிசாசின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இடம் என்பது பொருளாகும். கைதி படத்தின் மூலம் புகழ்பெற்ற அர்ஜூன் தாஸ் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.

இதற்கிடையே அட்லி இன்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் நவம்பர் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். திங்க் மியூசிக் இந்தியா இதன் இசை உரிமையை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: