December 3, 2020

ரூ 10 லட்சத்தைக் கொரோனா நிதிக்கு அளித்த அட்லி

கொரோனா வைரஸ் இதுவரை இந்தியாவில் 6000 பேரைப் பாதித்துள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்து இன்றோடு 17 நாட்கள் முடிந்துள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதிவரை 21 நாட்கள் ஊரடங்கு என்று இந்தியப் பிரதமர் அறிவித்த நிலையில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையொட்டி, மாநில அரசுகள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க ஆலோசித்து வருகிறது. தினக்கூலி பணியாளர்களின் அத்தியாவசியத் தேவைகள் கேள்விக்குறியாகியுள்ளது. இதே போலத் திரைத்துறையில் பணிபுரியும் பெப்ஸி தொழிலாளர்களுக்குத் திரைத்துறை பிரபலங்கள் பலரும் உதவிசெய்து வருகின்றனர்.

ராஜா ராணி படம் மூலம் தமிழுக்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. இவர் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். தொடர்ந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் அட்லி, சமீபத்தில் விஜய்யை வைத்துப் பிகில் படத்தை இயக்கினார். மாபெரும் வெற்றியடைந்த இந்தப்படம் நல்ல வசூலையும் ஈட்டித் தந்தது.

இந்நிலையில் இயக்குனர் அட்லி, ரூ 10 லட்சத்தைக் கொரோனா பாதிப்பு நிதிக்கு வழங்கியுள்ளார். ரூ. 5 லட்சத்தைப் பெப்ஸி தொழிலாளர் அமைப்பிற்கும், ரூ. 5 லட்சத்தை இயக்குனர் நலச்சங்கத்திற்கும் வழங்கியுள்ளார்.

%d bloggers like this: