October 26, 2020

”அக்னி சிறகுகள்” படத்தில் அருண் விஜய்யின் மிரட்டும் தோற்றம்

மூடர் கூடம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நவீன். இவர் நீண்ட இடைவெளிக்கு பின் அருண் விஜய்யின் நடிப்பில் “ அக்னி சிறகுகள் “ என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் ஒரு அதிரடி திரில்லர் படமாகும்.அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷராஹாசன், நாசர் மற்றும் பிரகாஷ் ராஜ் என்று முன்னணி நட்சத்திரங்கள் பலர் இதில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 1 நவம்பர் 2018 அன்று வெளியிட்டார். 2018ல் தொடங்கி இந்த வருடம் ஜனவரியில் வெளிவர வேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியீடு தள்ளிப் போயுள்ளது.

சமீபத்தில் நடிகை அக்‌ஷராஹாசனின் பிறந்த நாளன்று இப்படத்தின் போஸ்டரை படக் குழு வெளியிட்டு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தது. தற்போது இப்படத்தின் நாயகன் அருண் விஜய் அவர்களின் தோற்றம் வெளியிடப் பட்டுள்ளது. அதை அருண் விஜய் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ” அக்னி சிறகுகள் படத்தில் ரஞ்சித் கதாப்பாத்திரம் என்று குறிப்பிட்டு மேலும், மிகவும் நான் விரும்பி நடித்த கதாப்பாத்திரம், அது உங்களுக்கும் பிடிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

%d bloggers like this: