October 21, 2020

அச்சுறுத்தும் காட்சிகளுடன் விஜய் சேதுபதி வெளியிட்ட “சைலன்ஸ்” டிரெய்லர்!!!

அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருக்கும் ”சைலன்ஸ்” திரைப்படத்தின் மிரட்டலான டிரெய்லரை இன்று நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் .

அனுஷ்கா இந்த படம் முழுவதும் வாய்ப் பேச முடியாதவராக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது வெளி நாட்டில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

மாதவன் மேடையில் வயலின் வாசிக்கும் இசைக் கலைஞராகவும் அனுஷ்கா ஓவியங்களை வரையக்கூடிய கலைஞராகவும் நடித்திருக்கின்றனர். மேலும் ஹாலிவுட் நடிகரான மைக்கேல் மேடிசனும், அஞ்சலியும் காவல்துறை அதிகாரிகளாக வருகின்றனர். ஷாலினி பாண்டே சோனாலி என்ற கதாபாத்திரத்தில் அனுஷ்காவின் தோழியாக வருகிறார். சோனாலி என்ற இந்த கதாபாத்திரத்தை சுற்றி கதை அமைந்திருக்கும் விதமாக டிரெய்லரின் காட்சிகள் அமைந்துள்ளது. திகில் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் அவர்கள் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மலையாளத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. ஹேமந்த் மதுகர் அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தின் மிரட்டலான டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

%d bloggers like this: