January 18, 2021

அக்‌ஷரா ஹாசனின் “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” டீஸர் வெளியாகிறது!!!

அக்ஷரா ஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக இருக்கிறது.

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசனின் நடிப்பில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படம் ”அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு”.
இந்த திரைப்படத்தை ட்ரெண்ட் லவுட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இயக்குநர் ராஜா ராமமூர்த்தியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் அக்ஷராஹாசனின் பாட்டியாக பிரபல பாடகி உஷா உதுப் அவர்கள் நடித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சுரேஷ், கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்த்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜியார்ஜ் மரியன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

2015ஆம் ஆண்டு வெளியான ஷமிதாப் என்னும் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு முதன் முதலாக அறிமுகமானவர் அக்ஷரா ஹாசன். இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் 2017ஆம் ஆண்டு நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த விவேகம்.

தற்போது இவர் அக்னி சிறகுகள் மற்றும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற இந்த புதிய திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படக்குழுவினர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: