October 29, 2020

அக்ஷரா ஹாசனின் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படத்தின் டீஸர் வெளியானது!!!

அக்ஷரா ஹாசனின் நடிப்பில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படம் “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு”. இத்திரைப்படத்தின் வித்தியாசமான டீசர் இன்று வெளியாகி இருக்கிறது.

உலக நாயகன் நடிகர் கமலஹாசனின் இரண்டாவது மகளும் சுருதிஹாசன் அவர்களின் சகோதரியுமான அக்ஷராஹாசன் விவேகம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். மேலும் இவர் தமிழில் கடாரம்கொண்டான் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

அக்னிச்சிறகுகள் என்னும் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரை பார்க்கும்போது இந்த திரைப்படத்தில் அக்ஷராஹாசன் அவர்களின் பெயர் பவித்ரா என்பது தெரிகிறது. அதோடு படத்தின் தலைப்பை வைத்து பார்க்கும்போது பெண்களின் குணாதிசயமாக கருதப்படும் இந்த அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும் நான்கு குணங்களை பொறுத்து சமுதாயத்திற்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கக்கூடிய மனப் போராட்டமாக இந்த கதை அமைந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டீசரில் அக்ஷராஹாசன் அவர்களின் உருவமும் சில குரல்களின் உரையாடலும் இடம்பெற்றிருக்கிறது. இது இந்தப் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த புதிய டீசர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

%d bloggers like this: