நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன்

2012ஆம் ஆண்டு வெளிவந்த கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. இந்த திரைப்படத்தை இயக்குநர் பிரபு சாலமன் இயக்கி இருந்தார். நடிகர் செவாலியர் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமாகிய விக்ரம் பிரபு தனது அறிமுக படத்திலேயே அறிமுக நாயகர் காண சிறந்த விருதை பெற்றுள்ளார்.
விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் இணைந்து நடித்த கும்கி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை தொட்டது. விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனின் ஆகிய இருவருக்குமே இது அறிமுகப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த இருவரும் புதிய திரைப்படத்திற்காக இணைந்து நடிக்க இருக்கிறார்கள். சன் குழுமம் தயாரிக்கப் போகும் இந்த திரைப்படத்தை கொம்பன் புகழ் இயக்குநர் முத்தையா அவர்கள் இயக்குகிறார்.
நடிகை லட்சுமிமேனன் தனது உடல் எடையை குறைத்திருப்பது போன்ற பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மீண்டும் விக்ரம்பிரபுவோடு இவர் இணைந்து நடிக்கப் போகும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.