October 31, 2020

அதர்வாவின் “தள்ளிப் போகாதே” படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட அனிருத்!!!

அதர்வா நடிப்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “தள்ளிப் போகாதே”. இப்படம் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ‘நின்னு கோரி’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இவர் பிரேமம் மலையாளம் படம் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தார். மேலும் தள்ளிப் போகாதே படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அமிதாஷ் பிரதான் நடித்துள்ளார்.

மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து ஆர்.கண்ணன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷண்முக சுந்தரம் காட்சிகள் அமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்கே செல்வா எடிட்டிங் செய்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி திரை விரும்பிகளை ஈர்த்தது. இளைஞர்கள் விரும்பும் காதல் காவியமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதர்வா நடிப்பில் வெளிவந்த ‘பூமராங்’ திரைப்படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை பற்றிய அறிவிப்புக்காக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரன் “தள்ளிப் போகாதே” படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிடுவதாக அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து, இன்று அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் “தள்ளிப் போகாதே” திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு அதன் இணைப்பையும் பகிர்ந்துள்ளார். மேலும், படக்குழுவினர்களையும் டேக் செய்து வாழ்த்து கூறியுள்ளார்.

%d bloggers like this: