November 26, 2020

வரலட்சுமி! அதிரடி! பதிலடி!

சீனாவின் ஹூஹான் நகரிலிருந்து வந்த கொலைகார கொரோனா உலக நாடுகள் அனைத்திலும் வலம் வரத் தொடங்கியுள்ளது. கொரொனா சும்மா வராமல் அதன் கோரப்பசிக்குப் பல லட்சம் உயிர்களையும் இன்று வரை தின்று தீர்த்திருக்கிறது. உலகில் 300 கோடி மக்களை வீட்டில் அடைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்தியப் பிரதமர் மோடி மக்கள் வீட்டில் இருக்கும் படி ஊரடங்கைப் பிறப்பித்துள்ளார். அனைத்து நிறுவனங்கள், வணிக வளாகங்கள், நகைக்கடைகள், மதுபானக் கடைகளும் கூட மூடப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைக்கான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி மக்களும் வீட்டை விட்டு வெளிவந்த வண்ணமே உள்ளனர். செய்வதறியாத காவல் துறை அமைதியான முறையிலும் சொல்லிக் கேட்காதவர்களுக்கு சுலுக்கெடுத்து வருகின்றனர். இதனைக் கண்டித்து நடிகை வரலட்சுமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர்

”எப்போதும் ஒரு நாணயம் இரண்டு பக்கங்களைக் கொண்டது. இது ஊரடங்கு உத்தரவே தவிர மக்களை அடிக்க பெரிதாக ஒன்றுமில்லை. மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், இந்த நிலை இன்னும் மோசமானதாக மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

%d bloggers like this: