December 3, 2020

பெண்களுக்காக குரல் கொடுக்கும் நடிகை வரலட்சுமி!!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் பல பெண்கள் குடும்ப வன்முறை மூலம் தாக்குதலுக்கு உள்ளாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையிலும், பயத்திலும் பல பெண்கள் இதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.  இந்நிலையில் நடிகை வரலட்சுமி அவர்கள்,

”பல பெண்கள் லாக்டவுனில்,”டொமஸ்டிக் வயலன்ஸ்” என அழைக்கப்படும் குடும்ப வன்முறைகளை அனுபவித்து வருகிறார்கள். பெண்கள் வேறுவழியில்லாமலும், தப்பிக்க முடியாமலும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு உங்களுக்குத் தெரிந்த பெண்கள் யாராவது அப்படிப் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு 1800 102 7282 இலவச உதவி எண்ணைத் தெரியப்படுத்துங்கள். இந்த எண்ணிற்கு அழைத்தால் நிச்சயமாக அவர்களுக்கு உதவி கிடைக்கும். குழந்தைகளுக்குக் கூடத் தெரியாமல் ரகசியமாகக் கொடுங்கள், தப்பித் தவறி அவர்கள் சொல்லி விடவாய்ப்புள்ளது. இந்த வன்முறை வயது, செல்வாக்கு, படிக்காதவர்கள், படித்தவர்கள் இதையெல்லாம் பார்த்து நடப்பதில்லை. யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த எண்ணை அனைவருக்கும் பகிர்ந்து அவர்களை காப்பாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: