December 3, 2020

பாரதப்பிரதமருக்கு வரலட்சுமி பதில் ட்வீட்!

மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்குதண்டனை இன்று (மார்ச் 20) நிறைவேற்றப்பட்டது.  குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில்,

”நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நமது நாட்டுப் பெண்களின் சக்தி ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது.பெண்கள் அதிகாரமளித்தலுக்கு முக்கியக் கவனம் செலுத்தும் சமத்துவத்துக்கும், வாய்ப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் தேசத்தை நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார்

”7 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி வழங்கப்பட்டுள்ளது என்று நீங்கள் உண்மையாகவே நினைக்கிறீர்களா? குற்றம் நடந்து குறைந்தது ஆறு மாதத்திற்குள்ளாவது மரண தண்டனையை நாம் இந்நேரத்தில் வலியுறுத்த வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா? இந்தக் குற்றங்களால் பெண்கள் உயிரிழப்பது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

%d bloggers like this: