November 30, 2020

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிஸ் இந்தியா டிரெய்லர் வெளியானது!!!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில், நரேந்திர நாத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் தெலுங்கு மொழி திரைப்படம் மிஸ் இண்டியா.
நரேந்திர நாத் மற்றும் தருண் வசனத்தில், தமன் இசையில், மகேஷ் எஸ். கொனேரு தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், ஜகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், நதியா, நவீன் சந்திரா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் மிஸ் இந்தியா. கடந்த ஏப்ரம் மாதமே இந்தப் படம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து கல்யாண் சக்ரவர்த்தி வரிகளில் ஷ்ரேயா கோஷல் மற்றும் தமன் குரலில் கொத்தாக கொத்தாக பாடல் வெளியானது.


தற்போது மிஸ் இந்தியா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. மிஸ் இந்தியா திரைப்படம் விரைவில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் இந்த வருடம் மட்டும் குட் லக் சகி, மரக்கர்:அரபிக் கடலிண்டே சிம்ஹம், ரங்க் தே, அண்ணாத்த, சானிக் காயிதம், சர்க்காரு வாரி பட்டா உள்ளிட்டப் படங்களில் நடித்து வருவது குறிப்பிடதக்கது.

%d bloggers like this: