October 21, 2020

பிபாஷா பாஷூ நடிப்பில் “டேஞ்சரஸ்” வெப் தொடர்

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நாயகி என்றும் ஹாரர் ராணி என்றும் அழைக்கப்படுபவர் தான் நடிகை பிபாஷா பாஷூ. 2001ல் வெளிவந்த அஜ்னாபீ திரைப்படத்தில் அறிமுக நாயகியாக நடித்து அனைவரது மனங்களையும் கவர்ந்தார். அதுமட்டுமின்றி அந்த திரைப்படத்திற்கு அறிமுக நாயகி என்ற பிரிவில் பிலிம் ஃபேர் விருதும் பெற்றார்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்ததோடு இல்லாமல் பல விருதுகளையும் பெற்றுள்ளார். “டேஞ்சரஸ்” என்ற வெப் தொடரின் மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார் நடிகை பிபாஷா பாஷூ.

விக்ரம் பட் மற்றும் மைகா சிங் தயாரிப்பில் புஷன் படேல் இயக்கியுள்ளார். முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை பிபாஷா பாஷூ, கரண் சிங் க்ரோவர், சுயாஷ் ராய், சோனாலி ராட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சைக்கலாஜிக்கள் க்ரைம் தொடரான “டேஞ்சரஸ்” ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி எம் எக்ஸ் ப்லேயரில் வெளியிடப்படள்ளது. இந்நிலையில் இன்று இத்தொடரின் ட்ரைலர் வெளியானது.

அதனைப் பதிவிட்டு நடிகை பிபாஷா பாஷூ அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் காணாமல் போன தனது மனைவியை தேடும் ஒரு பதற்றமான கணவர். அவளை அவர் கண்டுபிடிப்பாரா அல்லது மறைக்கப்பட்ட ரகசியங்களை நாங்கள் வெளிக்கொண்டு வருவோமா என்ற கேள்வியை கேட்டு இதற்கு பதிலை ஆகஸ்ட் 14ம் தேதி எம் எக்ஸ் ப்லேயரில் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

%d bloggers like this: