October 21, 2020

நடிகை நித்யா மேனனை புகழ்ந்த நடிகர் அமித் சாத்!!!


நடிகர் அபிஷேக் பச்சன், அமித் சாத், நடிகை நித்யா மேனன் நடித்த ”ப்ரீத் இன்டூ தி ஷேடோஸ்” சீரீஸ் கடந்த ஜூலை 10 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

மகள் சியா காணாமல் போன பிறகு அபிஷேக் பச்சனும், நித்யா மேனனும் மகளைக் காப்பாற்ற போராடும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதைக்களத்தை கொண்ட த்ரில்லர் தொடர் ”ப்ரீத் இன்டூ தி ஷேடோஸ்”.

அமேசான் பிரைம் காணொளியில் ஸ்ட்ரீமிங் தொடங்கி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அமித் சாத் ”ப்ரீத் இன்டூ தி ஷேடோஸ்” சீரீஸில் நடிகை நித்யா மேனனுடன் தன் படபிடிப்பு அனுபவம் மற்றும் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் ‘இந்த காட்சியை நிறைய பேர் நேசித்திருக்கிறார்கள். நித்யா மேனனும் நானும் வேலை செய்யத் தொடங்கியபோது ஒரு குறிப்பிட்ட வகை ஒளி/ஆற்றல் இருந்தது. வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு முறைகள், வித்தியாசமான அணுகுமுறை மற்றும் இன்னும் ஒன்றை உணர்ந்தோம்!’ என்று தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: