November 30, 2020

கொரோனாவிற்கு மருந்து சொன்ன விடிவி கணேஷ்!!!

அஜித் நடித்த ரெட் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கணேஷ். குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த கணேஷ் விண்னைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்துப் புகழ் பெற்றார். அந்த படம் வெளிவந்த பிறகு வி.டி.வி கணேஷ் என்றப் பெயரில் அழைக்கப்படுகிறார்.

இந்த வருடம் சுமோ, வினோதன், டக்கர், கொப்பெருந்தேவி உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே லாரண்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை காணொளி மூலம் வெளியிட்டுள்ளார். அதில், “லாரண்ஸ் குழந்தையைப் போன்ற மனம் படைத்தவர். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், “கொரோனாவைக் கண்டு அஞ்ச வேண்டாம். தினமும் சூடாக 6 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். வேப்பிலை, துளசி போன்றவற்றைக் கொண்டு அடிக்கடி ஆவிப் பிடியுங்கள். உங்களை விரைவில் சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: