October 21, 2020

ஜூனியர் பச்சனை பாராட்டிய சாந்தனு

2020 ஜூலை 10 ஆம் தேதி ‘பிரீத் இன் டூ தி சேடோஸ்’ என்ற வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பலராலும் பாராட்டப்பட்டது. ’பிரீத் இன் டூ தி சேடோஸ்’ மாதவன் நடிப்பில் வெளியான பிரீத் என்ற வெப் சீரிஸின் இரண்டாம் சீசன் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அபிசேக் பச்சன், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரசிகர்களும் பல பிரபலங்களும் தங்களது இணையதள பக்கத்தில் இவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதனையடுத்து தற்போது சக்கரகட்டி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில், ” பிரீத் இன் டு தி சேடோஸ் அருமை, ஒவ்வொரு நடிகரும் சிறப்பாக நடித்துள்ளனர். அபிஷேக் பச்சன் போன்ற ஒரு நல்ல நடிகர் இந்த உலகிற்குக் கிடைத்ததில் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் யார் என்பது முக்கியமல்ல, நீங்கள் திறமையான மேலும் அர்ப்பணிப்புள்ளவராக இருந்தால், வாழ்க்கையில் சில நேரம் அதை வெளிப்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது” என்று பதிவிட்டு ஜூனியர்பச்சனையும் நித்யாமேனனையும் டேக் செய்துள்ளார்.

%d bloggers like this: