November 30, 2020

கொரோனா ஊரடங்கினால் அதிக மின்கட்டணம் செலுத்திய பிரபலங்கள்…

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் இந்தியாவிலும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. கொரோனா தமிழ் நாட்டிலும் வேகமாகப் பரவியதால் மின்வாரியத் துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின் படி, மக்கள் வெளியில் நடமாட அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாலும், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மின் துறை ஊழியர்கள் அளவீட்டைக் கணக்கிட இயலாத நிலையிலும் மக்கள் அனைவரும் கடந்த முறை கட்டிய கட்டணத் தொகையே தங்களது மின்கட்டணமாக இணையம் வாயிலாக செலுத்தலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே பலரும் சமூக வலைத்தளங்களில் தாங்களின் முந்தைய அளவீட்டை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்திருப்பதாகப் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதே போல, நடிகர் பிரசன்னாவும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ”இந்த கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் தமிழ்நாடு மின்வாரியத் துறை ஒரு சூறையாடலில் இருப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்?” என்று பதிவிட்டிருக்கிறார்.

இதற்குப் பதிலளித்துள்ள சென்னை 600028 புகழ் விஜயலட்சுமி, “கடவுளே அவர்கள் நம்பமுடியாதவர்கள், அதில் கடந்த இரண்டு தடவைகள் பில் தொகையை இரட்டிப்பாக்கி, தற்போதைக்கு அதை செலுத்தும்படி கேட்டனர். எங்களுக்கு வேறு வழியில்லை, ஏனென்றால் இது தமிழ் நாடு மின்சார வாரியம். எவரிடமிருந்தும் ஒரு பதில் கூட இல்லை!” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: