October 21, 2020

கே ஜி எஃப் சாப்டர் 2, வெகு விரைவில் வெளியாக இருக்கிறது

கே ஜி எஃப் சேப்டர் 1 திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரும் கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நாளை தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் முடிவடையும் என்றும் இதனை தொடர்ந்து இந்த படத்தின் வெளியீட்டு தேதி நிர்ணயிக்கப்படும் என்றும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா அறிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎப் சாப்டர் ஒன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை தொட்டது. மேலும் 250 கோடி வசூலை அள்ளிய முதல் கன்னட திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் கிருகண்டூர் தயாரித்த இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். பிரஷாந்த் நீலின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராக்கியாக யாஷ், ரீனா தேசாயாக ஸ்ரீநிதி செட்டியும், சூரிய வரதனாக ரமேஷ் இந்திராவும், கருடாவாக ராமச்சந்திர ராஜுவும், செய்தி தொகுப்பாளராக மாளவிகா அவினாஷும் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் அடுத்த திரைப்படத்திற்கான முன்னோட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது ரசிகர்களிடையே கேஜிஎப் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. எனவே இது அனைத்து மொழி ரசிகர்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கியது. இதனை விஜய் கிருக்கண்டூர் மற்றும் கார்த்திக் கௌடா ஆகியோர் இணைந்து ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் நடிகர் யாஷ், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஸ்ரீநிதி செட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளி போடப்பட்டிருந்தது. தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் இதன் படப்பிடிப்பு மீண்டும் நாளை தொடங்கப் போவதாகவும் ஒரு மாத காலத்திற்குள் இதன் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அதனை தொடர்ந்து இதன் வெளியீட்டுத் தேதி நிர்ணயிக்கப்படும் என்றும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு கார்த்திக் கவுடா அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது கேஜிஎப் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

%d bloggers like this: