October 29, 2020

அஜய் தேவ்கனின் சகோதரர் அனில் தேவ்கன் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்

ஹிந்தி திரைத் துறையில் சிறந்து விளங்கும் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராகிய அஜய் தேவ்கனின் சகோதரர் அனில் தேவ்கன் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக காலமானார்.

1991ஆம் ஆண்டில் திரைத் துறைக்கு அறிமுகமான நடிகர் அஜய் தேவ்கன் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவர் ஹிந்தி நடிகை காஜோலின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாகுபலி புகழ் இயக்குனர் ராஜமௌலியின் புதிய திரைப்படமாகிய ஆர் ஆர் ஆர் என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் 2000ம் ஆவது ஆண்டில் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கி பல வெற்றி திரைப்படங்களை தயாரித்து வழங்கி இருக்கிறார். மேலும் 2015 ஆம் ஆண்டில் என் ஒய் வி எஃப் எக்ஸ் வாலா என்னும் விஷூவல் எஃபெக்ட்ஸ் நிறுவனத்தை தொடங்கி பிரம்மாண்ட காட்சி அமைப்புகளை கொண்ட பல வெற்றி திரைப்படங்களை தயாரித்து வழங்கி இருக்கிறார். இவருக்கு அனில் தேவ்கன் என்ற சகோதரரும் நீளம் காந்தி என்னும் சகோதரியும் இருந்தனர்.

அனில் தேவ்கன் 1996 ஆம் ஆண்டில் ஜீத் திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கினார். 2000 ஆம் ஆண்டில் வெளியான ராஜு சாசா திரைப்படத்தை முதன் முதலாக இயக்கினார். மேலும் பிளாக் மெய்ல் , ஹால் ஈ தில், சன் ஆஃப் சர்தார் ஆகிய திரைப்படங்களை திரு அனில் தேவ்கன் இயக்கி இருந்தார்.

இவர் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். இதை முன்னிட்டு நடிகர் அஜய் தேவ்கன் தனது டிவிட்டர் பக்கத்தில் ” நான் எனது சகோதரன் அனில் தேவ்கனை இழந்து விட்டேன். இது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இரங்கல் கூட்டத்தை நாங்கள் நடத்தவில்லை. எனவே எனது சகோதரனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

%d bloggers like this: