தொடர்ந்து ஆறு மாதங்களாக முதலிடத்தில் நடிகர் விஜய்!!!

தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு தொடங்கித் தற்போதைய மாஸ்டர் படம் வரை பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தொட்ட பெட்டா ரோட்டு மேல பாடல் தொடங்கித் தான் நடிக்கும் திரைப்படங்களில் ஒரு சில பாடல்களையும் பாடி உள்ளார்.
1992இல் நாளைய தீர்ப்பு முதல் கடந்த ஆண்டு பிகில் வரை அனைத்து வருடங்களிலும் நடிகர் விஜய்யின் படம் தவறாமல் வெளியாகிவிடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டதால் இவரின் மாஸ்டர் பட வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே வருகிறது. மேலும் அண்மையில் சூர்யாவின் சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வெளியாவதாக அறிவிப்பு வெளியான முதல் மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்த நிலையில் இன்று மாஸ்டர் படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானதை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் திரைத்துறையில் டாப் 10 பட்டியலை வெளியிட்டு வரும் ஆர்மாக்ஸ் நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் விஜய் தொடர்ந்து ஆறாவது மாதமாக முதலிடத்தைப் பெற்றுள்ளார். அடுத்தடுத்த இடங்களில் அஜித், சூர்யா, ரஜினி காந்த், தனுஷ், சிவகார்த்திகேயன், கமலஹாசன், கார்த்தி, ஜெயம் ரவி ஆகிய நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் நடிகைகளில் பட்டியலில் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.