December 3, 2020

மாஸ்டர் படத்தின் நினைவுகளைப் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!!!

மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏப்ரல் மாதம் இத்திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடிடி தளங்களில் வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதைப் படக்குழு மறுத்துள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இன்று ஜீன் 22 , நடிகர் விஜய்யின் 46 வது பிறந்தநாளை அவரின் ரசிகர்களும், பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் மாஸ்டர் திரைப்படத்தின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “ மாஸ்டர் திரைப்படம் உண்மையில் எனக்கு மறக்க முடியாத நினைவு. அதில் ஒரு நாளை மட்டும் என்னால் தேர்வு செய்ய முடியாது. ஒவ்வொரு நாளும் உங்களுடன் செலவிட்டது என்றென்றும் நேசத்துக்குரியது “ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் லோகேஷ் இந்த தகவலை மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுத்த ஒரு புகைப்படத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

%d bloggers like this: