January 18, 2021

நடிகர் கிச்சா சுதீப்பின் புதிய திரைப்படத்தின் கண்ணோட்ட காணொளி வெளியானது!

கன்னட திரைப்படமான நடிகர் கிச்சா சுதீப்பின் ‘பேன்டோம்’ திரைப்படத்தின் முன்னோட்ட காணொளியை நடிகர் கிச்சா சுதீப் வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றுப் பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்தது. தற்போது ஊரடங்கு விதிமுறைகள் சற்று குறைக்கப்பட்டு அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது கன்னட திரைத் துறையினர் அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி நடிகர் கிச்சா சுதீப்பின் ‘பேன்டோம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பைக் கடந்த ஜூலை 16ஆம் தேதி துவங்கியுள்ளனர்.

இது குறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘பேன்டோம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஒவ்வொரு நிமிடமும் முன் எச்சரிக்கைகளைத் தயாரிப்பில் கவனித்து வருகின்றன. அதன் உற்சாகம் மற்றும் ஆர்வத்தை படப்பிடிப்பு தளத்தில் காணலாம். கிடைக்கக்கூடிய ஒவ்வொரு நபரும் பாதுகாப்பாக இருக்கத் தேவையான ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுத்து வருகின்றனர். எல்லாம் சுமுகமாகப் பயணிக்க வேண்டும் என்று நம்புகிறேன். மேலும் குறைந்த அளவு கூட்டத்தை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்தாலும், மகிழ்ச்சியாக அரசாங்கத்தின் விதிமுறைகளை படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தொழில்நுட்ப யூனிட், உற்பத்தி, கலை போன்ற அனைத்து கன்னட திரைத்துறை உறுப்பினர்களும் பின்பற்றி வருகின்றனர். கன்னட திரைத்துறையின் குடும்பத்திலிருந்து எங்களால் முடிந்தவரை உறுப்பினர்களுக்கு வேலை வழங்குவதே இதன் நோக்கம்’ என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘பேன்டோம்’ திரைப்படத்தில் தனது முதல் காட்சியின் காணொளியைத் திரைப்படத்தின் கண்ணோட்டமாகப் பகிர்ந்துள்ளார்.

%d bloggers like this: