மும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி

நேற்று டாக்டர் திரைப்படத்தின் டிக்டாக் பேன் பற்றிய செல்லம்மா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பல ரசிகர்களும், பிரபலங்களும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தங்களின் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். யூடியூப்பில் டிரெண்டிங்கில் முதலிடத்திலும் உள்ளது.
சிவகார்த்திகேயனின் நெருங்கிய திரைப்பட நண்பர்களுள் ஒருவர் நகைச்சுவை நடிகர் சூரி. இவர் இருவரும் மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீம ராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்கள்.
இவர் தற்போது “டாக்டர்” திரைப்பட செல்லம்மா பாடலைப் பற்றி சூரி தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் .அதில் சூரி கூறியிருப்பதாவது ‘ சண்டாளங்களா அடிச்சு செஞ்சு செதுக்கி விட்டீங்களே மும்மூர்த்திகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் இனிமே எல்லாம் அப்படித்தான் ‘ எனக் குறிப்பிட்டு உள்ளார். மேலும் அந்த பதிவில் சிவாவைப் பங்கு என்றும், இயக்குநர் நெல்சன் மற்றும் அனிருத்தை சகோதரர் என்றும் குறிப்பிட்டு உள்ளார்
இந்த பதிவைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் ‘ நன்றி பங்கு! டேன்ஸ்லாம் உங்ககிட்ட கத்துகிட்டது தானே!’ என்று பதில் அளித்துள்ளார்.
சண்டாளங்களா அடிச்சு செஞ்சு செதுக்கி விட்டீங்களே மும்மூர்த்திகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் இனிமே எல்லாம் அப்படித்தான்?@Siva_Kartikeyan pangku@Nelsondilpkumar brother@anirudhofficial brother#DoctorSingle! ??
➡️ https://t.co/uwmRjPScLh#Doctor pic.twitter.com/HSYUQXNoMl
— Actor Soori (@sooriofficial) July 17, 2020