October 21, 2020

நடிகர் மதியழகன் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்!!!

நடிகர் மதியழகன் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் விவரங்கள் செப்டம்பர் 21 மாலை 5.00 மணியளவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் கூறி இருக்கிறார்கள்.

நடிகர் வி.மதியழகன் அவர்கள் ஒரு புதிய திரைப்படத்தினை திதிர் ஃபிலிம் ஹவுஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருக்கிறார். மேலும் இவர் இந்த படத்தில் நடிக்கவும் செய்கிறார். இவரோடு நடிகை ஸ்ரீ ரெட்டி , வின்சென்ட் அசோகன், மனோபாலா, பவர்ஸ்டார், சுமன், வி டி வி கணேஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் தயாராகி கொண்டிருக்கும் கும்கி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் மதியழகன். மேலும் இவர் பாக்ஸர் என்னும் திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் விவேக் அவர்கள் இயக்குகிரார்.

தற்போது இவர் நடிக்க உள்ள இந்த புதிய திரைப்படத்தின் இதர செய்திகள் செப்டம்பர் 21 அன்று மாலை 5.00 மணிக்கு அறிவிக்கப் படும் என்று படக்குழுவினர் சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: