November 30, 2020

அதர்வாவின் “தள்ளிப் போகாதே” ட்ரெய்லரை வெளியிடும் ராக்ஸ்டார் அனிருத்!!!

நடிகர் முரளி அவர்களின் மகனும் நடிகருமான அதர்வா நடிப்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “தள்ளிப் போகாதே”. தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ‘நின்னு கோரி’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இவர் ப்ரேமம் மலையாளம் படம் மூலம் பிரபலமானவராவார். அதன் பின்னர் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தார். மேலும் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அமிதாஷ் பிரதான் நடித்துள்ளார்.

மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து ஆர்.கண்ணன் தயாரிக்கும் இப்படத்த்திற்கு ஷண்முக சுந்தரம் காட்சிகள் அமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்கே செல்வா எடிட்டிங் செய்த்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி திரை விரும்பிகளை ஈர்த்தது. இளைஞர்கள் விரும்பும் காதல் காவியமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜர்பைஜான் நாட்டில் ஜிசி என்ற சிகரத்தின் மீது 70 அடி உயரத்திற்கு மலையேற்றம் செய்து இந்த படத்தின் சில காட்சிகளை படமாக்கினார்களாம். அதர்வா நடிப்பில் வெளிவந்த ‘பூமராங்’ திரைப்படத்தை இயக்கியவரும் ஆர்.கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா தற்போது மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தள்ளிப் போகாதே தவிர்த்து, ஒத்தைக்கு ஒத்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். குருதி ஆட்டம் படமும், ருக்மணி வண்டி வருது போன்ற படங்களும் அதர்வா கைவசம் உள்ளது.

இந்நிலையில் இன்று நடிகர் அதர்வா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தள்ளிப் போகாதே’ என்ற ஹேஷ்டேகின் மூலம் இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரன் அவர்கள் ‘தள்ளிப் போகாதே’ படத்தின் ட்ரெய்லரை அக்டோபர் 9, வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் வெளியிடுகிறார் என்ற அறிவிப்பு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடும் மகிழ்ச்சியோடும் இந்த செய்தியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

%d bloggers like this: