January 27, 2021

“நான் நடித்த முதல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை” நடிகர் ஆரியின் உருக்கமான பேச்சு

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய நடிகர் ஆரி நேற்று ஒரு தருணத்தில் பேசும்போது தான் நடித்த முதல் திரைப்படம் “ஆடும் கூத்து” என்றும் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

2010ஆம் ஆண்டில் இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைசுழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆரி. இவர் மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா, உன்னோடு கா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான், அலேக்கா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிகருக்கான விருதுகளை இவர் பெற்றிருக்கிரார். இவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு தருணத்தில் இவர் பேசும் போது தான் முதலில் நடித்த திரைப்படம் ஆடும் கூத்து என்றும் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது வென்ற இந்த திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு இயக்குநர் டிவி சந்திரன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆடும் கூத்து. இந்த திரைப்படத்தில் இயக்குநர் சேரன், நவ்யா நாயர், ஆரி, பிரகாஷ்ராஜ், சீமான், மனோரமா மற்றும் பலர் நடித்துள்ளனர். இது சிறந்த தமிழ்த் திரைப்படத்திர்கான தேசிய விருதை பெற்றுள்ளது. 2005-ஆம் வருடம் நடைபெற்ற பல திரைப்பட விழாக்களில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்படவில்லை.

இந்த திரைப்படத்தின் கதைச் சுருக்கம் பின்வருமாறு:
முத்து(ஆரி) என்ற இளைஞர் தான் மணக்கப் போகும் மணிமேகலா(நவ்யா நாயர்) என்ற பெண்ணுக்கு வளையல் ஒன்றினை பரிசளிக்கிறார். அது செல்லுலாயிடை உருக்கி செய்யப்பட்ட வளையல். அந்த வளையலின் வழியே அவள் கண்களுக்கு மட்டும் சில உண்மை சம்பவங்களின் கற்பனை காட்சிகள் தெரிகிறது. அப்படி தெரியும் போதெல்லாம் அவள் ஆர்ப்பாட்டம் செய்கிறாள். ஒரு முறை அவள் கண்களுக்கு தெருக்கூத்தாடும் ஜோடி(சேரன்,நவ்யா நாயர்), ஜமீன்தார்(பிரகாஷ் ராஜ்), ஜமீன்தாரின் மகன்(சீமான்) ஆகியோருக்கு நடுவே நடக்கும் துயர சம்பவங்களில் கற்பனை காட்சிகள் தெரிகிறது. அப்போது அவள் செய்யும் ஆர்ப்பாட்டத்தினால் அவளது திருமணம் தடைப்பட்டுப் போகிறது. ஆனால் அவளது மனநிலையையும் சூழ்நிலையையும் புரிந்துகொண்ட முத்து அவளுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறான். அவள் கற்பனையில் கண்ட கதாபாத்திரங்களை தேடும் முயற்சியில் இருவரும் ஈடுபடுகிறார்கள். அந்த கற்பனை நிகழ்ச்சியின் உண்மை சம்பவங்களை கண்டு பிடிப்பது இந்த திரைப்படத்தின் மீதி கதையாக அமைகிறது. திரையரங்குகளில் வெளியிடப்படாத இந்த ஆடும் கூத்து திரைப்படம் ஜி5 தொலைக்காட்சியில் ஒரு முறை ஒளிபரப்பாகியது.

%d bloggers like this: