December 3, 2020

43 வயதாகும் 16 வயதினிலே!!!

சப்பாணிக்கு அந்த ஊரிலேயே அதிகம் படித்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மயிலின் மீது ஒருதலை காதல். ஆனால் மயிலுக்கு அந்த கிராமத்துக்கு வரும் மருத்துவ இளைஞர் மீது காதல். ஆனால் அந்த மருத்துவருக்கோ மயிலின் 16 வயதின் மீது காதல். இதை மயில் உணரும் போது மயிலின் தாய் தவறி விடுகிறார். தனியாக இருக்கும் மயிலிடம் தவறாக நடக்க முயலும் பரட்டையை மயிலுக்கு ஆதரவாக இருக்கும் சப்பாணி கொன்று விடுகிறான். சிறைக்கு செல்லும் சப்பாணியின் வரவுக்காக காதலோடு காத்திருக்கிறாள் மயில்.

16 வயதினிலே திரைப்படத்தின் இந்த கதையை முதல் முறையாக நேரடியாக கிராமத்துக்கு சென்று படம்பிடிதிருந்தார் இயக்குநர் பாரதிராஜா. இளையராஜாவின் இசை மேலும் அந்த கிராமத்தை மெருகூட்டியது.

1977ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை எஸ்.ஏ.ராஜ் கண்ணு தயாரித்திருந்தார். கமலஹாசன்(சப்பாணி), ஸ்ரீதேவி(மயில்), ரஜினகாந்த் (பரட்டை), காந்திமதி(குருவம்மா) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் ஹிந்தியில் 16 வயசு என்றும் தெலுங்கில் சொல்வ சவன் என்றும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் இந்தப் படம் 6 விருதுகளை பெற்றுள்ளது.

இந்த படம் வெளிவந்த 43 ஆண்டுகள் முடிந்ததை கொண்டாடும் வகையில் இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார்.

%d bloggers like this: