October 31, 2020

ஜே.ஜே.ப்ரெட்ரிக்கின் புதிய படத்திற்கு 2டி நிறுவனம் வாழ்த்து

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்த படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தில் பாக்யராஜ், பாண்டிய ராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பார்த்திபன் முதலானோர் நடித்திருந்தனர்.

2020 மே 29ஆம் தேதி பல தடைகளை மீறி பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. தமிழ் மொழியில் மட்டுமே வெளியான பொன்மகள் வந்தாள் மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெருமளவில் பேசப்பட்டது.

தற்பொழுது இதன் இயக்குனர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் அவர்கள் ஹிந்தியில் 2018ல் வெளியாகி வெற்றிப் பெற்ற படமான “ அந்தாதுன்” படத்தை தமிழில் இயக்க இருக்கிறார்.

இதில் நடிகர் பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த செய்தியை தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதை “ நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டு அதன் இயக்குனர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: