December 3, 2020

“கிழக்கே போகும் ரயில்” பாஞ்சாலியை வாழ்த்தும் இயக்குநர் இமயம்!!!

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் “கிழக்கே போகும் ரயில்”.

இத்திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா அவர்களால் ‘பாஞ்சாலி’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டு தனது வெகுளித்தனமான நடிப்பால் இன்றும் தனது ரசிகர்களின் இதயங்களில் பாஞ்சாலியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராதிகா.

கடந்த திங்கட்கிழமை அன்று தனது 42 ஆண்டுகள் கலைப்பயணத்தை கொண்டாடினார் ராதிகா சரத்குமார். பிரபலங்கள் ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பாஞ்சாலியை புகழ்ந்து கூறியுள்ளார்.

அதில், “என் இனிய தமிழ் மகளே, கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கின்ற 16 வயது ஒரு மழலையை ஏற்றி கொடி அசைத்து பயணிக்க வைத்தேன்..

42 வருடமாகிறது என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை.. பால் வெளித்திரளுக்கு எல்லை இல்லை.. உன் திரையுலக பயணத்துக்கும்.. உன் பாசத்துக்கும் முடிவேதும் இல்லை. வாழ்த்துக்கள். அன்புடன் பாரதிராஜா” என்று கூறி ராதிகா சரத்குமார் அவர்களையும் டேக் செய்துள்ளார்.

%d bloggers like this: