October 21, 2020

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி… சூர்யா ஜோதிகா நேரலையில்…

அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் எழுத்து இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் மே மாதம் 29ஆம் தேதி ஓ.டி.டி தளமான அமேசான் பிரைமில் வெளிவரவிருக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள்.

ஜோதிகா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜோதிகாவுடன் இணைந்து 5 மாபெரும் இயக்குனரகளான, பார்த்திபன், பாக்கியராஜ். பிரதாப் போத்தன், தியாகராஜன்,பாண்டிய ராஜன் ஆகியோர் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வழக்குரைஞராக ஜோதிகா வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்தப் படத்தின் பாடல்கள்(வரிகள்) யூ டியூபில் வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், பொன் மகள் வந்தால் படத்தினை சிறப்பிக்கும் வகையில், ஜோதிகா, சூர்யா ஒன்றாக இணைந்து ’சூம் காணொளியில்’ டிடியுடன் நேரலையில் சந்திக்க உள்ளனர். டிடி இதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கேள்விகளுடன் காத்திருக்கும் படி கூறியிருக்கிறார்.

%d bloggers like this: