October 28, 2020

பெப்சி தொழிலாளர்களுக்கு திரையுலகப் பிரபலங்கள் நிதியுதவி

உலகையே உலுக்கி வருகிறது கொரோனோ வைரஸ். இந்த வைரஸினால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.  இந்த வைரஸை குறைப்பதற்காக மாநில அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி நாளை (மார்ச்24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக பெப்சிஅமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறினார். இதற்காக நடிகர், சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி மூவரும் இணைந்து பெப்சி தொழிலாளர்களுக்கு 10 லட்சம்  வழங்கி உள்ளனர். மேலும் பார்த்திபன் 25 கிலோ எடையுள்ள 250 மூட்டை அரிசிகளை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் பெப்ஸி அமைப்பிற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதுபோன்று ஒவ்வொருவரும் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

%d bloggers like this: