October 28, 2020

ராம் சரண் கதாபாத்திரத்தின் அறிமுக காணொளி இன்று அவருடைய பிறந்த நாள் அன்று ரீலிஸ்

   சமீபத்தில் வெளியான  RRR படத்தின் `ஃப்ஸ்ட் லுக் ‘ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் வேளையில், தற்போது ராம் சரண் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய கதாப்பாத்திரத்தின் அறிமுக வீடியோவை ” பீம் ஃபார் ராமராஜு ” என்ற பெயரில் அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

               ராஜமெளனி என்றாலே பிரம்மாண்டத்துக்கும், கிராபிக்ஸ்க்கும் பேர் போனவர் என்பது உலகறிந்த விஷயம். அது மட்டுமின்றி சரித்திரப் படங்களை மீண்டும் உயிர்பித்து இன்று இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை சரித்திர படங்கள் நோக்கி திருப்பிய  பெருமை இவரையே சாரும். மஹதீரா’ முதன் முதலாக’ ராம்சரண் நடிப்பில் சரித்திர பின்னணியில் முயன்ற படம் மிகப் பெரிய வெற்றியும் வரவேற்பையும் பெற்றது. அதன் பிறகு இன்று வரை ராஜமெளலியின் படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

தற்போது ராம்சரணும், ஜுனியர் என்.டி.ஆரும் இணையும் இப்படம் பல தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.

ராம் சரணின் அறிமுக காணொளியும் பல எதிர்பார்ப்புகளையும், கேள்விகளையும் உருவாக்கியுள்ளது. மிகவும் ஆக்ரோஷமான இளைஞனாக, பூணூல் அணிந்தபடி வில்லை ஏந்தி நிற்கும் ராமன் போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அவரது கதாப்பாத்திரம் கதையில் என்ன சொல்ல வருகிறது என்ற கேள்வி இப்பொழுதே நம் மனதில் எழுகிறது.

%d bloggers like this: