October 28, 2020

அதனால் தான் நீங்கள் சினிமா ஸ்டார்- ரஜினிக்கு பியர் கிரில்ஸ்

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

      கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்த நிகழ்ச்சி காட்சியாக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடக்கவிருந்த படப்பிடிப்பு ஒரே நாளில் முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடிக்கடி புரோமோ காணொளிகள்  வெளியாகி வந்தது. 

அந்த காட்சிகளில் குறிப்பிடத்தக்கது ரஜினி தனது ஸ்டைலில் கண்ணாடியைப் போடுவது உள்ளிட்ட காட்சிகள். ரஜினி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி 23-03-2020 இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகியது. 

    அந்த காணொளியில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலாக நடப்பதும் ஓடுவதும் சிரிப்பதும் மந்திரம் போட்டு தனது வண்டியை மாயமாக்குவதுமாகப் புகுந்து விளையாடியிருக்கிறார்.

இன்னொரு காணொளியில் ரஜினிகாந்த் ஸ்டையில் நிகழ்ச்சி தொகுப்பாளரான பியர் கிரில்ஸ் கண்ணாடி போட முயற்சிக்கிறார்.ஒவ்வொரு முறையும் ரஜினி சொல்லிக் கொடுத்தபோதும் பியர் கிரில்ஸ்க்கு அது வரவே இல்லை.

      அதன் பிறகு ரஜினி ஸ்டைலாக கண்ணாடி போட்டதைப் பார்த்த பியர் கிரில்ஸ், அதனால்தான் நீங்கள் சினிமா ஸ்டார் என்று சொல்கிறார்.அதற்கு ரஜினிகாந்த் லேசாக அவரது முதுகில் தட்டிக்கொடுத்தார் இந்த காணொளியும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

%d bloggers like this: