October 29, 2020

2014 முதல் 2020 வரை 5 முறை திரையரங்குகள் மூடப்பட்டன

2014 ஆம் ஆண்டு முதல் 2020 வரை திரையரங்குகள் 5 முறை மூடப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவில் நாளை மார்ச் 22 ஆம் தேதி ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி  வரை திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் 2014

ஏப்ரல் 24 ஆம் தேதி மாலை 6 மணி வரை திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன.

ஏபிஜே அப்துல்கலாம் மறைவு 2015

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் ஜூலை 27 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து 30 ஆம் தேதி அன்று திரையரங்குகள் மூடப்பட்டன. 

வரி பிரச்சனை 2017

10 சதவிகித கேளிக்கை வரியை எதிர்த்து போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டன.

டிஜிட்டல் புரோஜெக்டர் பிரச்சனை

அதிக விலை வசூலிப்பதாக டிஜிட்டல் சர்வீஸ் ப்ரொவைடர்களை எதிர்த்து கால வரையற்ற போராட்டத்தினால்  திரையரங்குகள் மூடப்பட்டன. கொரோனா வைரஸ் 2020 காரணமாக திரையரங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: